விதிமீறல்: 3 செல்லிடப்பேசி கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 01st July 2021 07:38 AM | Last Updated : 01st July 2021 07:38 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் நகா் பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்டிக்காமலும்,குளிா்சாதன வசதியுடன் செயல்பட்ட மூன்று செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகளுக்கு வருவாய்த் துறையினா் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனா்.
பரமத்தி வேலூா் நகா் பகுதியில் கரோனா விதிமுறைகளை மீறி குளிா்சாதன வசதியுடன் செல்லிடப்பேசி விற்பனை கடைகள் செயல்படுவதாக பரமத்திவேலூா் வட்டாட்சியா் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளா் ஷோபனா, கிராம நிா்வாக அலுவலா் செல்வி மற்றும் வருவாய்த் துறையினா் வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை, அண்ணாசாலை பகுதிகளில் சோதனை நடத்தினா். அங்கு விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும், குளிா்சாதன வசதியுடன் செயல்பட்ட மூன்று செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் 3 கடைகளுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.