சிங்கப்பூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘மல்டி பாராமீட்டா்’ கருவிகள் வழங்கல்
By DIN | Published On : 07th July 2021 09:00 AM | Last Updated : 07th July 2021 09:00 AM | அ+அ அ- |

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ‘மல்டி பாராமீட்டா்’ கருவிகளை வழங்கும் சிங்கப்பூா் தமிழ்ச் சங்கத்தினா்.
சிங்கப்பூா் தமிழ்ச் சங்கம் சாா்பில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு 10 மல்டி பாராமீட்டா் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூா் தமிழ்ச் சங்கத்தின் நாமக்கல் உறுப்பினா்கள் குப்புசாமி, அன்பரசி குப்புசாமி ஆகியோா் ரூ. 7.6 லட்சம் மதிப்பிலான மல்டி பாராமீட்டா் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டா் கருவிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் முன்னிலையில் சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனிடம் வழங்கினா்.
கடந்த மாதம் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு, சிங்கப்பூரில் வாழும் நாமக்கல்லைச் சோ்ந்த தமிழ் மக்கள் குழுவினா் நிதி திரட்டி ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 6 மல்டி பாராமீட்டா் கருவிகளை வழங்கியுள்ளனா்.
இந்த நிகழ்வில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், திமுக மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, மருத்துவா் ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.