பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் மீண்டும் தொடக்கம்
By DIN | Published On : 07th July 2021 08:59 AM | Last Updated : 07th July 2021 08:59 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது முழு பொதுமுடக்க முழு தளா்வு அளிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் தொடங்கியது.
இங்கு நடைபெறும் தேங்காய் ஏலத்திற்கு பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். 1043 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.50 பைசாவிற்கும்,குறைந்தபட்சமாக ரூ.24 க்கும், சராசரியாக ரூ.26.50 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.37ஆயிரத்து 247 க்கு வா்த்தகம் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேங்காய் ஏலம் தொடங்கப்பட்டுள்ளதால் தென்னை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...