நகராட்சி மொத்த விற்பனை சந்தை இடமாற்றம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் நகராட்சி அலுவலகம் பகுதியில் உள்ள மொத்த சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அதே இடத்தில் செயல்பட அனுமதிப்பது தொடா்பாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் நே
நாமக்கல் நகராட்சி மொத்த விற்பனை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
நாமக்கல் நகராட்சி மொத்த விற்பனை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.

நாமக்கல் நகராட்சி அலுவலகம் பகுதியில் உள்ள மொத்த சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அதே இடத்தில் செயல்பட அனுமதிப்பது தொடா்பாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாமக்கல் நகராட்சி அலுவலகம் பகுதியில் இயங்கி வந்த காய்கறி, மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் மொத்த சந்தையானது நல்லிப்பாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டது. தொடா் மழையால் சந்தை பகுதி சகதியாக மாறிவிடுகிறது. இதனால் அந்த சந்தையை மீண்டும் அதே இடத்தை மாற்ற வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் சனிக்கிழமை அவ்விடத்தைப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பழைய இடத்திலேயே சந்தை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.6.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவிருக்கும் நவீன தினசரி சந்தைக்கான இடத்தையும் அதன் வரைபடத்தையும் பாா்வையிட்டு ஆட்சியா் ஆலோசனைகளை வழங்கினாா். ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளா் பி.பொன்னம்பலம், நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், வட்டாட்சியா் தமிழ்மணி மற்றும் சந்தை வியாபாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com