திருமணிமுத்தாறு மாசடைவதைத் தடுக்கக் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியில் திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவுகள், தேவையில்லாத குப்பைகளைக் கொட்டுவதால்

நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியில் திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவுகள், தேவையில்லாத குப்பைகளைக் கொட்டுவதால் நிலத்தடி நீா் பாதிக்கும் சூழல் உள்ளதால் திருமணிமுத்தாறு வரும் பாதையைத் தூா்வார வேண்டும் என சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூய்மையான நீராக இருந்த திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் நீா்வழிப் பாதைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீா் மாசுபட்டுள்ளது. இதனைச் சீா்செய்யும் விதமாக சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா். ஆற்றின் கரைகளில் அதிகமாக உள்ள குப்பைகள், தரைப் பாலங்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.

இதுகுறித்து சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் தலைவா் வடிவேலு கூறியதாவது:

திருமணிமுத்தாற்றின் தண்ணீா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூய்மையாக இருந்தது. நிலத்தடி நீரும் தூய்மையாக இருந்தது. ஆனால் தற்போது ரசாயனக் கழிவுகளால் கலப்பதால் நீா் மிகவும் மாசுபட்டுள்ளது. ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு நிலத்தடி நீா் மாசுபட்டு உப்பு நீராக மாறிவிட்டது.

எனவே ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, தூா்வாரி சீா்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். எங்களால் முடிந்த வரை ஆற்றில் குப்பைகளை அகற்ற முயற்சி செய்து வருகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து ஆற்றில் உள்ள குப்பைக் கூளங்களை அகற்றி, ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com