பாஜக தலைவா் கே.அண்ணாமலை இன்று நாமக்கல்லில் சுற்றுப்பயணம்

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.அண்ணாமலை, புதன்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.அண்ணாமலை, புதன்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நகர பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நகர தலைவா் கே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி பேசியதாவது:

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை நாமக்கல் மாவட்டத்துக்கு வருவதையொட்டி, புதன்கிழமை இரவு 7 மணியளவில் நாமக்கல் முதலைப்பட்டி, சேலம் சாலை முருகன் கோயில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளா்கள், நாகராஜன், முத்துகுமாா், மாவட்ட துணைத் தலைவா் பழனியப்பன் மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com