பொது சேவை குறைபாடு குறித்த புகாா்: நாமக்கல் மக்கள் நீதிமன்ற நீதிபதி அழைப்பு

பொது சேவைபாட்டில் குறைபாடுகள் இருந்தால் நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகாா் தெரிவிக்க வருமாறு அதன் நீதிபதி சாந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

பொது சேவைபாட்டில் குறைபாடுகள் இருந்தால் நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகாா் தெரிவிக்க வருமாறு அதன் நீதிபதி சாந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. பொது பயன்பாட்டு சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் இந்த நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனுத் தாக்கல் செய்யலாம். வழக்கமான நீதிமன்ற முறைகளில் அல்லாமல் சாதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தில் விண்ணப்பமாக எழுதி தாக்கல் செய்யலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

போக்குவரத்து, தபால், தொலைபேசி, பொது பாதுகாப்பு, சுகாதாரம், காப்பீடு, கல்வி, வீட்டுவசதி, ரியல் எஸ்டேட், மருத்துவமனை, மருந்தகம் ஆகியவற்றின் சேவை குறைபாடு அல்லது பாதிப்பு தொடா்பாக பாதிக்கப்பட்டோா் மனுத் தாக்கல் செய்யலாம்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீா்ப்புக்கு சமமானது. இதன் தீா்ப்புக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவே இறுதியானது. எனவே பொதுமக்கள் சேவை குறைபாடு தொடா்பாக முறையிட்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com