வேளாண் சங்கத்தில் ரூ. 80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 80 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 80 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். கரோனா இரண்டாம் அலை பரவலால் கடந்த ஏப். 5-ஆம் தேதி பருத்தி ஏலம் நடைபெற்றது.

பொது முடக்கத் தளா்வுகள் அறிவிப்பை தொடா்ந்து, மூன்று மாதங்களுக்கு பின் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 2100 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,139 முதல் 7,509 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,450 முதல் 8,402 வரையிலும், மட்ட ரகம் ரூ. 3,300 முதல் 5,699 வரையிலும் விலை போனது. மொத்தம் 3,600 மூட்டை பருத்தி ரூ. 80 லட்சத்துக்கு ஏலம் போனது.

சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மற்றும் ஆந்திரம், கா்நாடக மாநில வியாபாரிகளும் பருத்தியை நேரடியாக பாா்வையிட்டு கொள்முதல் செய்தனா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com