பாதை ஆக்கிரமிப்பு : நடவடிக்கை கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

ராசிபுரம் அருகே பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாதை ஆக்கிரமிப்பு : நடவடிக்கை கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

ராசிபுரம் அருகே பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் - தொப்பப்பட்டி இடையே உள்ள நல்லதண்ணிக்காடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை விவசாயம், கோழிப் பண்ணைத் தொழில் செய்து வரும் சிலா் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாக புகாா் கூறினா்.

இதுகுறித்து கிராம அலுவலா், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிங்களாந்தபுரம், தொப்பப்பட்டி கிராம பொதுமக்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், காவல் துறையினா் கிராம மக்களிடம் சமரசம் பேசி பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், நிலத்தை அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com