திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள், தேங்காய் பருப்பு ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 70 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 70 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

ஏலத்தில் விரலி ரகம் குவிண்டால் ரூ. 6,412 முதல் ரூ. 8,602 வரையும், கிழங்கு ரகம் குவிண்டால் ரூ. 6,012 முதல் ரூ. 7,633 வரையும், பனங்காளி ரகம் ரூ. 10,500 முதல் ரூ. 19,119 வரையும் விற்பனையானது. மொத்தமாக 1,500 மூட்டை மஞ்சள் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனையானது.

தேங்காய் பருப்பு ஏலம்...

தேங்காய் பருப்பு முதல் தரம் ரூ. 86.70 முதல்ரூ.102.60 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 76.90 முதல் ரூ. 82.60 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 50 மூட்டைகள் ரூ. 1.50 லட்சத்துக்கு விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com