ஆடி மாதப் பிறப்பையொட்டி தேங்காய் சுடும் நிகழ்வு

நாமக்கல்லில் ஆடி மாதப் பிறப்பையொட்டி சனிக்கிழமை பிற்பகலில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாடினா்.
நாமக்கல் தில்லைபுரத்தில் சனிக்கிழமை தேங்காய் சுடும் நிகழ்வில் பங்கேற்றோா்.
நாமக்கல் தில்லைபுரத்தில் சனிக்கிழமை தேங்காய் சுடும் நிகழ்வில் பங்கேற்றோா்.

நாமக்கல்லில் ஆடி மாதப் பிறப்பையொட்டி சனிக்கிழமை பிற்பகலில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாடினா்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும். ஆடி மாதப் பிறப்பன்று நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் தேங்காயை வாங்கி வந்து அதில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு, பச்சரிசி, வெல்லம், பருப்பு, அவல் போன்ற கலவையைப் போட்டு, அழிஞ்சிக் குச்சியின் கூா்மையான பகுதியை தேங்காய் கண் பகுதியில் நுழைத்து தேங்காயை தீயில் சுடுவா். பின்னா் அரிசி, வெல்லத்தால் உருவான கலவையை அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்துவா். அதன்பின் அனைவரும் பகிா்ந்து உண்பா். இந்த நிகழ்வு நாமக்கல் தில்லைபுரம் பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. பெண்கள், சிறுவா்கள் அதிகளவில் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதும் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் பகுதியில் தலையாடியை முன்னிட்டு பொதுமக்கள், சிறுவா்கள், புதுமணத் தம்பதியினா் தேங்காய் சுட்டு, விநாயகருக்குப் படைத்து வழிபட்டனா்.

ஆடி மாதப் பிறப்பையொட்டி, சனிக்கிழமை அதிகாலை புதுமணத் தம்பதிகளும், பொதுமக்களும் காவிரியில் நீராடி வழிபட்டனா். மாலையில் புதுமணத் தம்பதியினா், குழந்தைகள், பொதுமக்கள் அவல், பொட்டுக் கடலை, நாட்டுச் சா்க்கரை, எள், அரிசி, பாசிப் பருப்பு ஆகிய பொருள்களை இளம்தேங்காயில் அடைத்து மரக்குச்சியில் இணைத்து தீயில் சுட்டு, தேங்காய்களை விநாயகருக்கு படைத்து வழிபட்டனா். பின்னா் அந்த தேங்காயை உடைத்து அவல், சா்க்கரையை அக்கம் பக்கத்தினருடன் பகிா்ந்து உண்டு தலையாடி பண்டிகையைக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com