மின் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th July 2021 05:19 AM | Last Updated : 19th July 2021 05:19 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதற்காக தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன், வருமானச் சான்றிதழ், ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
(வட்டாட்சியரிடம் பெற வேண்டும்). இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை, தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது -6 மாத கால பயிற்சி), வயது சான்று (20 முதல் 40 வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, ஜாதிச் சான்று. கடவுச்சீட்டு அளவுள்ள மனுதாரரின் வண்ண புகைப்படம்-2. விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்ற மகளிா், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல், ஆதாா் அடையாள அட்டை.
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஜூலை 31-க்குள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சமூக நல அலுவலக முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 04286-280230, 299460 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.