Enable Javscript for better performance
பொது விநியோகத் திட்ட அரிசி அரவை முகவராக விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பொது விநியோகத் திட்ட அரிசி அரவை முகவராக விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

    By DIN  |   Published On : 28th July 2021 09:02 AM  |   Last Updated : 28th July 2021 09:02 AM  |  அ+அ அ-  |  

    நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட அரிசி அரவை முகவராக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக தேவையான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னா் அவை வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் அக்கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியாா் அரவை ஆலைகள் மூலம் அரிசி அரவை செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியாா் அரவை ஆலை உரிமையாளா்களிடமிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில், புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்வது தொடா்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp