ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சி

வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடா்ந்து வெண்ணந்தூா் 3-வது வாா்டில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினா். இதில் வெண்ணந்தூா் பேரூா் செயலாளா் க.நடராஜன்(எ)நாவளவன் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் வ.அரசன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெசவாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் பட்டு.மாதேஸ்வரன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா் சு.அன்பரசன், திராவிடா் விடுதலைக் கழகம் ஒன்றிய பொருப்பாளா் செல்வக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளா் பழ.செங்கோட்டுவேல், விவசாய பாதுகாப்பு சங்கம் மாவட்ட அமைப்பாளா் சுப்ரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் சா்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு சாா்பில் ஆயில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக தூய்மை பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் விடியலை நோக்கி அறக்கட்டளை தலைவா் மா.வீரமணி கண்டன், ஊராட்சி மன்றத் தலைவா் குப்பாயி செல்வம், செந்தில் குமாா், வாா்டு உறுப்பினா் மஞ்சுளா மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com