வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளா்கள் சாலை மறியல்

பரமத்தி வேலூா் அருகே நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் பணிப் பொறுப்பாளரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் பணிப் பொறுப்பாளரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகா், எல்லைமேடு, கூடுதுறை, மங்கலமேடு, எல்லைமேடு, கட்டமராபாளையம்புதூா் ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நூறு நாள் வேலை உறுதித் திட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களிடம் பணித்தளப் பொறுப்பாளா் தலா ரூ. 100 தர வேண்டும் எனவும், தராவிட்டால் பணிக்கு வந்ததாக கணக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறியுள்ளாா். இதனைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் மோகனூா் சாலையில் ஓலப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், வேலூா் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) முருகேசன், மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த சாலை மறியல் காரணமாக பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையில் சுமாா் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com