அதிக போதைக்கு விஷச்சாறு கலந்து மது விற்பனை செய்த இளைஞா் கைது
By DIN | Published On : 29th July 2021 09:15 AM | Last Updated : 29th July 2021 09:15 AM | அ+அ அ- |

அதிக போதை தருவதற்காக விஷச்சாறு கலந்த மதுவினை விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
குமாரபாளையம் பகுதியில் மதுவிற்பனை தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள கடையின் முன்பாக சேலம் மாவட்டம், சங்ககிரி, அரசெட்டிப்பட்டி, நாடாா் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் காா்த்திகேயன் (37) சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இவரிடமிருந்து 10 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஆய்வு செய்தபோது, மது அருந்தினால் அதிக போதை வருவதற்காக விஷச்சாறு கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திகேயனைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.