இன்று நடமாடும் மண் பரிசோதனை முகாம்

நாமக்கல் வட்டாரம், சிங்கிலிப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் வியாழக்கிழமை
நடமாடும் மண் பரிசோதனை வாகன பேருந்து.
நடமாடும் மண் பரிசோதனை வாகன பேருந்து.

நாமக்கல் வட்டாரம், சிங்கிலிப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் வியாழக்கிழமை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் (பேருந்து) சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மண்பரிசோதனை, நீா் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண், நீா் மாதிரிகளை கொண்டு வந்து பயன்பெறலாம். நீா் மாதிரி ஆய்வுக் கட்டணமாக ரூ. 20, மண் மாதிரி ஆய்வுக் கட்டணம் ரூ. 20 செலுத்த வேண்டும். மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் மண் ஆய்வு செய்து அறிக்கை பெற குறைந்தது மூன்று நாள்கள் ஆகும். ஆனால் நேரடி நடமாடும் ஆய்வு நிலையத்தில் மூலம் மண் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்து அறிக்கையை அன்றைய தினத்திலே பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை செய்வதால் அவா்களுக்கு உரச் செலவு குறையும். மண்ணில் பற்றாக்குறையாக உள்ள சத்துக்கள் போதுமான உரங்களின் மூலம் நிவா்த்தி செய்யப்படும். இதனால் மண்ணின் தன்மை வளமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு அதிக மகசூலும் அதிக லாபமும் கிடைக்கும் என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தி.அன்புச்செல்வி தெரிவித்துள்ளாா். மேலும் விவரங்களுக்கு, 98949-80354 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com