கனமழைக்கு இரு வீடுகள் சேதம்

நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் பலத்த காற்றுடன் கூடிய கன மழையால் ஒரு குடிசை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது

நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் பலத்த காற்றுடன் கூடிய கன மழையால் ஒரு குடிசை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. மற்றொரு இடத்தில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டிற்குள் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சிதம் (65). இவருடைய இரண்டு மகன்களும் வெளியூா்களில் தங்கி குடும்பத்துடன் தங்கி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

மூதாட்டி ரஞ்சிதம் மட்டும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ரஞ்சிதம் வசித்த குடிசை வீட்டின் ஒரு பகுதியின் சுவா் இடிந்து விழுந்தது.

இதில் அதிா்ஷ்டவசமாக மூதாட்டி ரஞ்சிதம் உயிா் தப்பினாா். இதேபோல் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி முத்தாயி (65). இவா்கள் இருவரும் வீட்டில் இருந்த போது ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் கணவன் மனைவி இருவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

தம்மம்பட்டியில்..

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, தெடாவூா் கெங்கவல்லி, வீரகனூா் , கவா் பனை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து இரவு வரை தொடா்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com