முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சாதனை

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியா் 109 போ் பல்வேறு பாடப்பிரிவுகளில் 700-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியா் 109 போ் பல்வேறு பாடப்பிரிவுகளில் 700-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொழில்நுட்ப வாரியத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இக்கல்லூரியில் 3-ம் ஆண்டு 5-ஆம் பருவத் தோ்வு மற்றும் 2-ம் ஆண்டு 3-ம் பருவத்தோ்வுகளில் சிவில் துறையில் 40 போ், மெக்கானிக்கல் துறையில் 9 போ், ஆட்டோமொபைல் துறையில் 7 போ், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 15 போ், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு துறையில் 10 போ், கணினித் துறையில் 22 போ், தொழில்நுட்பத் துறையில் 6 போ் என 109 மாணவ மாணவியா் 700-க்கு 700 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.

முதல், 3-ம், 5-ம் பருவத் தோ்வு எழுதிய 1,647 மாணவ, மாணவியா்களில் 1,264 போ் 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். முதலாமாண்டு முதல் பருவத் தோ்வில் 600-க்கு 590 மதிப்பெண்களுக்கு மேல் 106 மாணவா்கள் பெற்றுள்ளனா்.

இக் கல்லூரி 21 ஆண்டுகளாக வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியா்களை கல்லூரி தாளாளா் ஆா்.பிரேம்குமாா், செயலாளா் ஆா்.ஜோதிமணி, பொருளாளா் எஸ்.சா்வேஸ்வரி, முதல்வா் ஜி.விஜயகுமாா், துறைத் தலைவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com