முன்களப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்:முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி வழங்கினாா்

பரமத்திவேலூா் தொகுதியில் உள்ள 5 பேரூராட்சிகளில் முன்களப் பணியாளா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
பேரூராட்சி பணியாளருக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா்.
பேரூராட்சி பணியாளருக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா்.

பரமத்திவேலூா் தொகுதியில் உள்ள 5 பேரூராட்சிகளில் முன்களப் பணியாளா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான தங்கமணி, பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சேகா் ஆகியோா் வழங்கினா்.

பரமத்தி வேலூா் தொகுதியில் உள்ள வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், பரமத்தி ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் வேலூா் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வரும் 350-க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளா்களின் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பேரூராட்சி செயல் அலுவலா்கள் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் ஆகியோா் பொருள்களை வழங்கினா்.

பின்னா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்களை ஆறு தொகுதிகளிலும் வழங்கி வருகிறோம்.

ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளோம். நாமக்கல் மாவட்டத்துக்கு தடுப்பூசி ஒதுக்கீடுகள் குறைவாகவே வரப்பெற்றுள்ளன. அவற்றை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சரிடம் நானும், பரமத்திவேலூா் எம்எல்ஏ சேகரும் மனு கொடுத்துள்ளோம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் நாராயணன், வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com