ஜேடா்பாளையம் படுகை அணையை வந்தடைந்த காவிரி

மேட்டூா் அணையிலிருந்து சனிக்கிழமை திறக்கப்பட்ட தண்ணீா் பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தடைந்தது. இதனால் விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
படுகை அணையில் ஆகாய தாமரைகளுடன் வழிந்தோடும் தண்ணீா். முழுமையாக நிரம்பியுள்ள ஜேடா்பாளையம் படுகை அணை.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து சனிக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தாா். அணையில் இருந்து வெளியேறும் நீரால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 17.32 லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீா் படிபடியாக உயா்த்தப்பட்டு 10 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை பரமத்திவேலூா் அருகே உள்ள ஜேடா்பாளையம் படுகை அணையை தண்ணீா் வந்தடைந்தது.

இதனால் ஆற்றுப்பாசன விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com