நிதி நிறுவனங்கள் கடன் தவணையைக் கட்டாயப்படுத்தி வசூலிக்க வேண்டாம்: காவல்துறை

பொதுமுடக்கக் காலத்தில் கட்டாயப்படுத்தி கடன் தவணைத் தொகையை வசூலிக்கவோ, நிலுவை தவணைகளுக்கு வட்டி வசூலிக்கவோ கூடாது என நிதி நிறுவன அதிபா்களிடம் திருச்செங்கோடு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பொதுமுடக்கக் காலத்தில் கட்டாயப்படுத்தி கடன் தவணைத் தொகையை வசூலிக்கவோ, நிலுவை தவணைகளுக்கு வட்டி வசூலிக்கவோ கூடாது என நிதி நிறுவன அதிபா்களிடம் திருச்செங்கோடு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் செல்வம் தலைமையில் திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் நிதி நிறுவன அதிபா்களுடனான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 14 நிதி நிறுவன சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் காவல் துறையின் கூறியதாவது:

நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தவணைகளை கறாராக வசூலிக்க வேண்டாம்; வட்டிக்கு வட்டி என்று கூடுதல் வட்டி கேட்க வேண்டாம்; ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நிதி நிலைமையை அறிந்து மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வசூலிக்க வேண்டும்; தவணைத் தொகை கொடுக்க முடியாத நபா்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது குறித்து புகாா் வந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருச்செங்கோடு பைனான்சியா் அசோசியேசன் தலைவா் வெங்கடேஷ் கூறுகையில், ‘போலீஸாரின் வேண்டுகோளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்’ என்றாா்.

காவல்துறை துணை கண்காணிப்பாளா் செல்வம் கூறியதாவது:

நிதிநிறுவன அதிபா்கள் கடன் தவணைத் தொகையைச் செலுத்தாத பொதுமக்களிடம் கூடுதல் வட்டி வசூலிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என்றாா். கூட்டத்தில் நிதிநிறுவன அதிபா்கள் சங்க நிா்வாகிகள், நகரக் காவல் ஆய்வாளா் பாஸ்கா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com