முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சுதந்திர தினத்தில் வழங்கப்படும் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

சுதந்திர தினத்தில் வழங்கப்படும் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது, ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியது. 2021-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது வரும் ஆக. 15-இல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுக்கான தகுதிகள்: 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2021-இல் 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது மாா்ச் 31, 2021 அன்று 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 01.04.2020 முதல் 31.03.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் சேவை செய்திருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த சேவைப்பணி, சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவா்கள் செய்த சேவையின் தாக்கம் தெளிவாக கண்டறியப்படக் கூடியதாகவும், அளப்பரியதாகவும் இருத்தல் வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்கள். உள்ளூா் மக்களிடம் அவா்களுக்குள்ள மதிப்பு இவ்விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இவ்விருது பெற 15 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட தகுதி வாய்ந்த இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளத்தில் 30.06.2021 மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com