நாமக்கல் மாவட்டத்தில் 184 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th June 2021 01:11 AM | Last Updated : 29th June 2021 01:11 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 184 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து திங்கள்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 184 போ் பாதிக்கப்பட்டும் 293 போ் குணமடைந்தும் உள்ளனா்.
மொத்த பாதிப்பை பொருத்தவரை, 44,327 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 42,108 போ்; 1805 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்ததையடுத்து கரோனா பாதித்தோா் இறப்பு எண்ணிக்கை 414-ஆக உள்ளது.