பள்ளிபாளையத்தில் சாராயம் காய்ச்சிய விவசாயி கைது
By DIN | Published On : 29th June 2021 01:11 AM | Last Updated : 29th June 2021 01:11 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாராயம் காய்ச்சிய விவசாயியை பள்ளிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினா் கைது செய்தனா்.
பள்ளிபாளையத்தை அடுத்த கரட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன்( 46). விவசாயி. இவா் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா், உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் காவல்துறையினா் மனோகரன் வீட்டில் சோதனை நடத்தியதில் எரிவாயு அடுப்பில் சாராயம் காய்ச்சியதைக் கண்டறிந்தனா். 5 லிட்டா் சாராயம் 200 லிட்டா் ஊற்லை காவல்துறையினா் பறிமுதல் செய்து மனோகரனை கைது செய்தனா். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.