முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கல்
By DIN | Published On : 04th March 2021 04:38 AM | Last Updated : 04th March 2021 04:38 AM | அ+அ அ- |

குளிா்பானங்களை அருந்தும் போக்குவரத்துக் காவலா்கள்.
நாமக்கல்: கோடைகாலத்தையொட்டி, நாமக்கல்லில் போக்குவரத்துக் காவலா்களுக்கு புதன்கிழமை முதல் குளிா்பானம் வழங்கப்படுகிறது.
நாமக்கல்லில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேலாக அதிகரித்துள்ளதால், நாமக்கல் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அதற்கு போக்குவரத்து ஆய்வாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். நாமக்கல் துணைக் காவல் கண்காணிப்பாளா் காந்தி பங்கேற்று, காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கினாா். மேலும் சாலைகளில் பணியில் ஈடுபட்டிருந்தோருக்கு மோா், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன.