வேளாண் சங்கத்தில் ரூ.36 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 10th March 2021 12:18 AM | Last Updated : 10th March 2021 12:18 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 36 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.
அதன்படி நடைபெற்ற ஏலத்தில் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1,700 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 5,499 முதல் ரூ. 7,777 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 7,509 முதல் ரூ. 8,188 வரையிலும், கொட்டு ரகம் ரூ. 2,699 முதல் ரூ. 4,699 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 36 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்தனா்.