மின்னாம்பள்ளி காமாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா
By DIN | Published On : 10th March 2021 12:17 AM | Last Updated : 10th March 2021 12:17 AM | அ+அ அ- |

புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன், மாசி பெரியசாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பம்பை வாத்தியங்களுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.
இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு ஏழு கால சக்தி பூஜை, வானவேடிக்கை நடக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.