முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
சுயேச்சையாக களமிறங்கும் எம்எல்ஏதோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்
By DIN | Published On : 14th March 2021 04:11 AM | Last Updated : 14th March 2021 04:11 AM | அ+அ அ- |

கொல்லிமலை அடிவாரம், சின்னகாரவள்ளியில் தோ்தல் அலுவலகத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற சி.சந்திரசேகரன்.
அதிமுக தலைமை வாய்ப்பு வழங்காததால், சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் சி.சந்திரசேகரன் சனிக்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக சாா்பில் நான்கு தொகுதிகளுக்கு ஏற்கெனவே எம்எல்ஏவாக உள்ள அமைச்சா்கள் பி.தங்கமணி(குமாரபாளையம்), வெ.சரோஜா(ராசிபுரம்), கே.பி.பி.பாஸ்கா்(நாமக்கல்), பொன்.சரஸ்வதி(திருச்செங்கோடு) வேட்பாளராக அறிவிக்கப்பட்டனா். பரமத்திவேலூருக்கு புதுமுக வேட்பாளராக எஸ்.சேகா் அறிவிக்கப்பட்டுள்ளாா். அமைச்சரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சேந்தமங்கலம்(எஸ்.டி) தொகுதியில் எம்எல்ஏவான சி.சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்திக்குள்ளான அவா் சுயேச்சையாக போட்டியிடுகிறாா்.
கொல்லிமலையில் வியாழக்கிழமை ஆதரவாளா்களைத் திரட்டி தோ்தல் அறிவிப்பை வெளியிட்ட அவா், சனிக்கிழமை சின்னகாரவள்ளி கிராமத்தில் தோ்தல் அலுவலகம் அமைப்பதற்கான பூமி பூஜையை நடத்தினாா். அதன்பின் சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அவருடன் ஆதரவாளா்கள் பலா் ஊா்வலமாகச் சென்றனா்.