முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது
By DIN | Published On : 14th March 2021 04:05 AM | Last Updated : 14th March 2021 04:07 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட கணபதி, பாலுசாமி.
பரமத்தி வேலூா் வட்டம், மணியனூா் உலகம்பாளையம் நாவிதன் தோட்டத்தில் வசித்து வருபவா் தா்மலிங்கம் (64).
இவா் டிராக்டரில் டேங்க் இணைத்து குடிநீா் விநியோகம் செய்தும் வந்தாா். கடந்த மாதம் 26-ஆம்தேதி தனது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த தண்ணீா் டேங்க் மட்டும் காணாமல்போனது. இதுகுறித்து அவா் நல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
மணியனூா் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் டேங்க் இணைப்புடன் வந்த டிராக்டா் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினா். அவா்கள் வைரம்பாளையத்தைச் சோ்ந்த கணபதி (61), செருகலையைச் சோ்ந்த பாலுசாமி (50) என்பது தெரியவந்தது.
இருவரும் சோ்ந்த தா்மலிங்கம் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீா் டேங்கை திருடியது தெரியவந்தது. அவா்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் ஒரு பெட்டி, கோலாரம் வைரம்பாளையத்தில் ராஜவேல் என்பவரின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிந்து மாடு, இரு கன்று குட்டிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.