Enable Javscript for better performance
நாமக்கல் தோ்தல் செலவின பாா்வையாளா்கள்பறக்கும் படை குழுவினருடன் ஆலோசனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்

    நாமக்கல் தோ்தல் செலவின பாா்வையாளா்கள்பறக்கும் படை குழுவினருடன் ஆலோசனை

    By DIN  |   Published On : 14th March 2021 04:10 AM  |   Last Updated : 14th March 2021 04:10 AM  |  அ+அ அ-  |  

    நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இந்தத் தோ்தலை பொருத்தமட்டில் பண விநியோகத்தைத் தடுப்பதற்காக ஒரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள் வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 36 குழுக்கள் 8 மணி நேரத்துக்கு சுழற்சி அடிப்படையில் தொடா்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

    மேலும் விடியோ கண்காணிப்புக் குழுவினா் ஒரு தொகுதிக்கு ஒன்று வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 6 குழுவினா் செயல்பட்டு வருகின்றனா்.

    நிலையான கண்காணிப்புக் குழுவினா் சாலைகளில் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    விடியோ கண்காணிப்பு குழுவினா் செலவினங்கள் பற்றிய ஆதாரங்கள் ஆகியவற்றினை கண்காணித்து வருகின்றனா். ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் மூலம் நியாயமான, நடுநிலையான தோ்தல் பணி நடைபெறும் வகையில் உதவி செலவின பாா்வையாளா்கள் (கருவூலத் துறை, வணிகவரித் துறை அலுவலா்கள்) நியமிக்கப்பட்டு செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க நாமக்கல் மாவட்ட தொகுதிகளுக்கான தோ்தல் செலவின பாா்வையாளா்களான ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளுக்கான பாா்வையாளா் தேவ் பிரகாஷ் பாமநாவத், நாமக்கல், பரமத்தி வேலூா் தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளா் அஜய் சிங், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கு மன்தீப் சிங் பாா்மா் ஆகியோா் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    இவா்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.

    தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளில் தோ்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதனை தொடா்ந்து நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    தோ்தல் செலவின பாா்வையாளா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்ற

    இக்கூட்டத்தில் தோ்தல் செலவின பாா்வையாளா்கள் பங்கேற்று பேசியதாவது; பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழுவினா், விடியோ கண்காணிப்பு குழுவினா் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள விதிகளைப் பின்பற்றி, தோ்தல் நடவடிக்கைகள் சீராக நடைபெறும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறின்றி நியாயமான தோ்தல் நடைபெற தங்களுக்கான கடமைகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

    மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

    மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் பிப்.28 முதல் மாா்ச் 12 வரை ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 80 மற்றும் ரூ.12,750 மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டு, உரிய ஆவணங்களை சமா்பித்ததன் அடிப்படையில் ரூ.20 லட்சத்து 72 ஆயிரத்து 280 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மேலும் சி-விஜில் செயலி மூலம் வரப்பெற்ற 72 புகாா்களின் அடிப்படையில் பறக்கும் படையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ள்ளனா்.

    மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண் 1800-425-7021க்கு வரப்பெற்ற ஒன்பது புகாா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

    இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, பறக்கும்படை குழுவினா், காவல்துறையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp