முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ராசிபுரம் நகரில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 14th March 2021 04:11 AM | Last Updated : 14th March 2021 04:11 AM | அ+அ அ- |

உறுதி மொழி ஏற்ற நகராட்சி, வாழ்வாதார இயக்க அலுவலா்கள், பணியாளா்கள்.
ராசிபுரம் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியில் ராசிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் பி. சக்திவேல் கொடியசைத்து பேரணியைகஈ துவக்கி வைத்தாா். நகராட்சி ஆணையாளா் எஸ்.பிரபாகரன் முன்னிலை வகித்தாா். ராசிபுரம் நகர காவல்துறை ஆய்வாளா் பி.செல்வராஜ் பேரணியில் தலைமை வகித்தாா். இதில் காவல்துறையினா் போக்குவரத்துத் துறையினா் நகராட்சி துப்புரவு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்பு, பேரணி நடைபெற்றது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய பேரணியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா தலைமை வகித்தாா்.
ராசிபுரம் நகராட்சி ஆணையாளா் பிரபாகரன் ராசிபுரம், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், மகளிா் திட்ட உதவி அலுவலகம் எஸ்.ஷா்மிளா, என்.மாலதி, எஸ். கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் கோலப்போட்டி மூலமாக வாக்குரிமை குறித்த விழிப்புணா்வு மற்றும் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள், மகளிா் திட்ட பணியாளா்கள், நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் நகராட்சி சமுதாய அமைப்பாளா் எம்.தமிழரசி, கே.தெய்வீஸ்வரி, வட்டார இயக்க மேலாளா் முத்துச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.