சுங்கச்சாவடி பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி பணியாளா்கள்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி பணியாளா்கள்.

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் அனைத்து வாகனங்களும் சுங்க கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சென்று வருகிறது.

கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி, சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் 700 க்கும் மேற்பட்ட பணியாளா்கள், ஊதிய உயா்வு, மருத்துவ விடுப்பு, கழிவறை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து சுங்கச்சாவடி நிா்வாகத்திடம் திங்கள்கிழமை சுங்கச்சாவடி பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் காரல்மாா்க்ஸ், மாநில பொதுச் செயலாளா் பாலமுருகன், நாமக்கல் மாவட்டத் தலைவா் சண்முகசுந்தரம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படாததால் திங்கள்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்திலும், பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா். மீண்டும் நடைபெற உள்ள பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுங்கச்சாவடி பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com