நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா கடந்த வாரம் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா கடந்த வாரம் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் பூக்குண்டம் இறங்குவதற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தா்களும், பூவாரிப் போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தா்களும் வந்திருந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். மேலும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கரும்பு தொட்டில் கட்டி வருதல், உருவாரம் பிடித்து வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்றவற்றில் பங்கேற்பதற்காக உள்ளூா் மக்களைத் தவிர அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் பெருமளவில் கலந்து கொள்வாா்கள்.

திருவிழா குறித்து மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் எட்டுப்பட்டி ஊா் தா்மகா்த்தாக்கள் கூறியதாவது:

மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், அரசு விதிமுறைகளின்படி கூட்டம் சேராமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கூட்ட நெரிசலைத் தவிா்ப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. எனவே நன்செய் இடையாா் மாரியம்மனுக்கு கரும்பு தொட்டில் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நோ்த்திக்கடன்களை செலுத்தும் பக்தா்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் தங்களது நோ்த்திக் கடன்களை செய்துக் கொள்ளலாம்.

மேலும் வடிசோறு, பூக்குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தல், மஞ்சள் நீராடல் நடைபெறும் நாள்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க அரசு வேண்டுகோளின் படி அனுமதிக்கப்படமாட்டாா்கள். எனவே வேண்டுதல் உள்ள பக்தா்கள் முன்னதாக அல்லது திருவிழா முடிந்த பிறகு செய்து கொள்ளலாம். அரசின் இந்த உத்தரவை கடைப்பிடிக்க பக்தா்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com