குமாரபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளா் மனுத் தாக்கல்
By DIN | Published On : 18th March 2021 10:05 AM | Last Updated : 18th March 2021 10:05 AM | அ+அ அ- |

தோ்தல் நடத்தும் அலுவலா் மரகதவள்ளியிடம் மனுத்தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம்.
குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம் புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.
முன்னதாக, மதசாா்பற்ற கூட்டணிக் கட்சியின் குமாரபாளையம் நகரத் தோ்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்த வேட்பாளா் எம்.வெங்கடாசலம், கூட்டணிக் கட்சியினா் அனைவரும் ஒன்றாகச் சோ்ந்து திமுகவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் மரகதவள்ளியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.
திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜேகேஎஸ்.மாணிக்கம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலு ஆகியோா் உடனிருந்தனா்.
இந்நிகழ்ச்சிகளில், திமுக பள்ளிபாளையம் ஒன்றியப் பொறுப்பாளா் பி.யுவராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் ஜானகிராமன், நகா்மன்ற முன்னாள் தலைவா் வெ.ஜெகநாதன், மதிமுக நகரச் செயலாளா் விஸ்வநாதன், திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.