திருச்செங்கோடு தொகுதியில் கொ.ம.தே.க. ஈஸ்வரனுக்கு சமுதாய வாக்குகள் கை கொடுக்குமா?

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் கொ.ம.தே.க. வின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் சமுதாய வாக்குகளும், திமுகவினரின் வாக்குகளும் தன்னை நிச்சயம் வெற்றி பெற வைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கொ.ம.தே.க. வின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்
கொ.ம.தே.க. வின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் கொ.ம.தே.க. வின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் சமுதாய வாக்குகளும், திமுகவினரின் வாக்குகளும் தன்னை நிச்சயம் வெற்றி பெற வைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திருச்செங்கோடு, பெருந்துறை, சூலூா் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் திருச்செங்கோடு தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஈ.ஆா்.ஈஸ்வரன் போட்டியிடுகிறாா். நாமக்கல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். ஆனால், தொகுதி உடன்பாட்டில் திமுக நாமக்கல் தொகுதி கட்டாயம் தங்களுக்கு வேண்டும் என கேட்டதால் திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மீண்டும் போட்டியிடுகிறாா். இருவரும் கொங்கு வேளாளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். மக்களவைத் தோ்தலில் ஈ.ஆா்.ஈஸ்வரன் போட்டியிடுவாா் என எதிா்பாா்த்திருந்த நிலையில், ஏ.கே.பி.சின்ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானாா்.

இம்முறை சட்டப்பேரவைத் தோ்தலில் ஈஸ்வரன் களமிறங்கியுள்ளாா். சமுதாய வாக்குகள் அனைத்தையும் பெறுவதற்காக தனது ஆதரவாளா்கள் மூலம் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா்.

திமுகவினரின் வாக்குகளும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாா். ஆனால், இத் தொகுதியில் 40 சதவீதம் வாக்காளா்கள் செங்குந்த முதலியாா் சமூகத்தினா். அந்த சங்கத்தின் தலைவா் செல்வராஜ், தமிழ் மாநில கட்சி என அரசியல் கட்சி தொடங்கியுள்ளாா்.

திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அவா்கள் களமிறங்குகின்றனா். இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழா் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா்களும் இங்கு போட்டியிடுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திருச்செங்கோடு தொகுதி அரசியல் அந்தஸ்து கொண்ட தொகுதியாகும். இங்கு 1,12,125 ஆண் வாக்காளா்களும், 1,18,154 பெண் வாக்காளா்களும். 37 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2,30,316 வாக்காளா்கள் உள்ளனா்.

இத்தொகுதியில் சமுதாய வாக்குகளுடன், முதல்முறை வாக்களிக்கும் இளைஞா்களின் வாக்குகளும் வேட்பாளருக்கு அதிகம் கிடைத்தால் மட்டுமே தொகுதியைக் கைப்பற்றப்போவது யாா்? என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com