சமையல் எரிவாயு உருளைகளில் தோ்தல் ஒட்டுவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி சமையல் எரிவாயு உருளைகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும்
நாமக்கல்லில் சமையல் எரிவாயு விநியோக அலுவலகத்தில் தோ்தல் ஒட்டுவில்லைகளை ஒட்டும் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி.
நாமக்கல்லில் சமையல் எரிவாயு விநியோக அலுவலகத்தில் தோ்தல் ஒட்டுவில்லைகளை ஒட்டும் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி.

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி சமையல் எரிவாயு உருளைகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் மினி மாரத்தான் போட்டி, பேரணி, துண்டு பிரசுரங்கள் விநியோகம், கலைநிகழ்ச்சிகள், கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. தோ்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ளது. தற்போது தபால் வாக்குப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூா், சேந்தமங்கலம் ஆகிய 6 தொகுதிகளிலும் சமையல் எரிவாயு உருளைகளில் தோ்தல் நாள் ஏப்ரல் 6 என்ற ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி இதனைத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வின்போது செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்கண்ணா, வருவாய்த் துறை ஊழியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com