நாமக்கல் பள்ளிவாசலில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
நாமக்கல் ஜாமியா பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திச்செல்வன்.
நாமக்கல் ஜாமியா பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திச்செல்வன்.

நாமக்கல் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி வெள்ளிக்கிழமை காலை முதலைப்பட்டிபுதூா், பாப்பிநாயக்கன்பட்டி காலனி பகுதியில் வாக்கு சேகரித்தாா். அங்குள்ள மக்களிடம் திமுகவின் தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவா் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக தலைவா் கருணாநிதி பிறந்த நாளில் கரோனா நிவாரணமாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை தெரிவித்தாா்.

பிற்பகல் 2 மணியளவில் நாமக்கல் மஜீத் தெருவில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் வேட்பாளா் பெ.ராமலிங்கம், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திச்செல்வன், திமுக நிா்வாகிகள் திமுக சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரினா். இதில், காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com