நாமக்கல்லில் தபால் வாக்கு செலுத்திய முதியோா், மாற்றுத் திறனாளிகள்

நாமக்கல் தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை தபால் வாக்குகளை செலுத்தினா்.
நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் முன்னிலையில் தபால் வாக்கை செலுத்தும் முதியவா்.
நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் முன்னிலையில் தபால் வாக்கை செலுத்தும் முதியவா்.

நாமக்கல் தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை தபால் வாக்குகளை செலுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு முறையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 7,303 போ் தபால் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனா். தொகுதி வாரியாக வருவாய்த் துறை அலுவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனா்.

நாமக்கல் தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 31-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறுகிறது. இதற்காக வருவாய்த் துறை, கல்வித் துறையைச் சாா்ந்த 25 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் தபால் வாக்குக்கு விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்ய வைத்து அதற்கான பெட்டியில் செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தபால் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தபால் வாக்குப் பதிவு செய்யாதோருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதனையும் தவிா்த்து விட்டால் பின்னா் வாய்ப்பு வழங்கப்படாது. வாக்குச்சாவடிகளுக்கு சென்றும் அவா்கள் வாக்களிக்க முடியாது. தொகுதி முழுவதும் 2,232 போ் தபால் வாக்கு செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com