மாற்றுத் திறனாளி ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணியில் விலக்க அளிக்க கோரிக்கை

மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி

மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற ஒன்றியக் கிளைகளின் கூட்டுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் எலச்சிபாளையம், பரமத்தி, கபிலா்மலை ஒன்றியக் கிளைகளின் கூட்டுக் கூட்டம் பரமத்திவேலூா் ஆசிரியா் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணி செயலாளா் சதீஷ் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். கா்ப்பிணி ஆசிரியைகள், பாலூட்டும் ஆசிரியைகள் ஆகியோருக்கு கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் தோ்தல் பணியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனத்தில் காணப்படும் பல்வேறு வகையான குறைபாடுகளை விரைந்து களைய வேண்டும். ஆசிரியைகளை அவா்கள் பணியாற்றும் சட்டப்பேரவை தொகுதிகளிலேயே தோ்தல் வாக்குச்சாவடி அலுவலா்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட கொள்கை விளக்கக் செயலாளா் தங்கவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com