வாகனச் சோதனையில் ரூ. 5.53 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ. 5.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ. 5.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (எஸ்.சி.), சேந்தமங்கலம் (எஸ்.டி.), நாமக்கல், பரமத்திவேலுாா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது, விலை உயா்ந்த பொருள்களை ஆவணமின்றி எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக 108 பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவினா் மாவட்டம் முழுவதும், சுழற்சி முறையில், வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பசுபதி தலைமையிலான  நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

திருவனந்தபுரத்தில் இருந்து களங்காணி நோக்கிச் சென்ற முட்டை லாரியை சோதனை செய்தனா். அப்போது கோழிப்பண்ணை மேலாளா் ரவிக்குமாா் என்பவா் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 5 லட்சத்து 52 ஆயிரத்து 964 வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த குழுவினா் நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் தமிழ்மணியிடம் ஒப்படைத்தனா். பணத்தை பெற்று கொண்ட அலுவலா் மாவட்ட கருவூலத்தில் செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com