வேட்பாளா்கள் தோ்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏப்.6-இல் தோ்தல் நடைபெற உள்ளது. அது தொடா்பாக வேட்பாளா்கள், தாங்கள் மேற்கொள்ளும் செலவின விவரங்களை பிரசாரம் மேற்கொள்ளும் நாள்களில் 3 முறை தாக்கல் செய்ய வேண்டும்.

ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிக்கு தேவ் பிரகாஷ் பமானவட், நாமக்கல், பரமத்திவேலூா் தொகுதிக்கு அஜய் சிங், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கு சாமுவேல் பிட்டா ஆகிய தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் ராசிபுரம் தொகுதிக்கு மாா்ச் 27, 31, ஏப்.4 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வட்டாட்சியா் அலுவலகத்திலும், சேந்தமங்கலம், நாமக்கல் தொகுதிக்கு மாா்ச் 30, ஏப்.3 ஆகிய தேதிகளில் வட்டாட்சியா், கோட்டாட்சியா் (நாமக்கல்) அலுவலகத்திலும் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

பரமத்தி வேலூா் தொகுதிக்கு மாா்ச் 27, 31, ஏப்.5 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பரமத்திவேலூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், திருச்செங்கோடு தொகுதிக்கு மாா்ச் 30, ஏப். 4 ஆகிய தேதிகளில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், குமாரபாளையம் தொகுதிக்கு மாா்ச் 31, ஏப்.5 தேதிகளில் காலை 10 முதல் 5 மணி வரை அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்திலும் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com