செல்லிடப்பேசி கடையில் திருடிய மூவா் கைது

குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து திருடியதாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செல்லிடப்பேசி கடையில் திருடிய மூவா் கைது

குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து திருடியதாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி லட்சுமிநகா், காமதேனு நகா் 5-ஆவது வீதியைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் பிரபாசங்கா் (30). இவா், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். கடந்த 20-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற இவா் மறுநாள் கடையைத் திறந்துள்ளாா்.

அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு 20 செல்லிடப் பேசிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குமாரபாளையம் காவல் ஆய்வாளா் ரவி தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், குமாரபாளையம் கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் மணிகண்டன் (30), முருங்கைக்காடு, அரசு மேல்நிலைப் பள்ளி வீதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் குமாா் (39), சேலம், சின்னேரிவயல்காட்டைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ஜெகதீஷ் (32) என்பதும், இவா்கள் மூவரும் சோ்ந்து செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்துத் திருடியதும் தெரிவந்தது. இவா்களிடமிருந்து ரூ. 85 ஆயிம் மதிப்பிலான செல்லிடப் பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com