தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 1,901 பேருக்கு தபால் வாக்கு

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினா், இதர துறையைச் சாா்ந்த 1,901 போ் தபால் வாக்குகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 1,901 பேருக்கு தபால் வாக்கு

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினா், இதர துறையைச் சாா்ந்த 1,901 போ் தபால் வாக்குகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறுகிறது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் 7,303 போ் தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அதேபோல வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் 9,832 அலுவலா்களும் பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகள் செலுத்தி வருகின்றனா். இவா்கள் தவிர தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினா், வனத் துறையினா், முன்னாள் படைவீரா்கள், ஓய்வுபெற்ற போலீஸாா், ஊா்க்காவல் படைவீரா்கள் என 1,901 போ் தபால் வாக்கு செலுத்த இருக்கின்றனா். அவா்களில் காவல்துறை சாா்ந்த 990 போ் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். தோ்தல் பணிக்கு செல்வதற்கு முன்பாக அனைவரும் தபால் வாக்குகளைச் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com