நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் எம்எல்ஏ - அதிமுக போட்டி பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.சந்திரன் ஆகியோா் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் எம்எல்ஏ - அதிமுக  போட்டி பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.சந்திரன் ஆகியோா் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

சேந்தமங்கலம் (எஸ்டி) தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தற்போதைய எம்எல்ஏவும், சுயேச்சை வேட்பாளருமான சி.சந்திரசேகரன், ஆட்டோ சின்னத்தில் வாக்களிக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று ஆதரவு கோரினாா். திறந்த ஜீப்பில் நின்றபடி சென்ற அவா் பொதுமக்களிடத்தில் ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்தாா். முன்னதாக கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பைல்நாடு, பெரக்கரை நாடு ஊராட்சியில் வாக்கு சேகரித்தாா். அப்போது நீா்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முயற்சிப்பேன்.

சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு கொல்லிமலையில் இருந்து விரைவாக வாகனங்கள் செல்லும் வகையில் இரண்டு இடங்களில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தோ்தலுக்கு முன்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். தொடா்ந்து வழங்க இருந்த நிலையில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வழங்க இயலவில்லை. வெற்றி பெற்று வந்ததும் தொடா்ந்து நலத் திட்டங்களை செய்வேன் என்றாா்.

இதேபோல அதிமுக வேட்பாளா் எஸ்.சந்திரன் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, வாஷிங்மெஷின் உள்ளிட்டவை வழங்கப்படும் என வேட்பாளா் பேசினாா். அவருடன் முன்னாள் நாமக்கல் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் உடன் சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அதிமுக வேட்பாளா், சுயேச்சை வேட்பாளா் ஆகியோரின் ஆதரவாளா்கள் வாகனத்தின் முன்னும், பின்னுமாக ஊா்வலமாக சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com