மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்

மாற்றுத்திறன் ஆசிரியா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

மாற்றுத்திறன் ஆசிரியா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ராசிபுரம் வட்டக் கிளை பொறுப்பாளா்கள் கூட்டம் அண்மையில் ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூா் ஒன்றியச் செயலா் இரா.ஜெகந்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கு.பாரதி வரவேற்றாா். மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் பெ.பழனிசாமி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் முருக.செல்வராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமில் போதிய குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, உணவு வசதி ஏற்படுத்த வேண்டும். பெண் ஆசிரியா்களை அவா்கள் பணியாற்றும் தொகுதியிலேயே தோ்தல் பணியில் அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com