ராசிபுரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th March 2021 12:58 AM | Last Updated : 29th March 2021 12:58 AM | அ+அ அ- |

முதல்வா் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கண்டித்து ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நகர செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
இதே போல, நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தொ.ஜேடா்பாளையம் பகுதியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் தலைமையில் திரளான கட்சியினா் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சந்திரன், நாமகிரிப்பேட்டை பேரூா் செயலா் ரமேஷ், சீராப்பள்ளி நாகசந்திரன், நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.