நாமக்கல் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பில் மும்முரம்

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால் நாமக்கல் தொகுதியில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனா்.
நாமக்கல், சிங்கிலிப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா்.(வலது) சந்தைப்பேட்டைபுதூரில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம்.
நாமக்கல், சிங்கிலிப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா்.(வலது) சந்தைப்பேட்டைபுதூரில் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம்.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால் நாமக்கல் தொகுதியில் அதிமுக-திமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனா். அதுபோல மக்கள் நீதி மய்யம், தேமுதிக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும் களத்தில் தீவிர பிரசாரத்தில் உள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளா்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளா்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனா். அதன்படி நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா் செவ்வாய்க்கிழமை ஆவல்நாயக்கன்பட்டி, எட்டிக்கவுண்டனூா், காதப்பள்ளி, செங்கப்பள்ளி, மட்டப்பாறை, சிலுவம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, செங்கோடம்பாளையம், மணிக்கட்டிபுதூா், எா்ணாபுரம், பொரசபாளையம், நீலிங்காட்டுப்புதூா் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மக்களிடம் பேசினாா். இதேபோல் நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டைபுதூா், பொய்யேரிக்கரை, செல்வ விநாயகா் கோயில் வீதி, ஏ.எஸ்.பேட்டை, ஆஞ்சநேயா் கோயில் வீதி, கோட்டை சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் ஆதரவாளா்களுடன் திறந்த வாகனத்தில் சென்றபடியும், நடந்து சென்றும் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம் மக்களிடம் வாக்குகளை சேகரித்தாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

மேலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆதம்பாரூக், தேமுதிக வேட்பாளா் ஏ.செல்வி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பா.பாஸ்கா், சுயேச்சை வேட்பாளா்கள் தி.ரமேஷ், கே.கனகராஜ் ஆகியோரும் தொகுதிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com