புதைவட மின்பாதை பெற்ற முதல் நகராட்சி குமாரபாளையம்

தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன் முதலாக புதைவட மின்பாதை அமைக்கப்பட்ட நகராட்சியாக குமாரபாளையம் உள்ளது என
பெண்களிடம் வாக்குகள் சேகரிக்கிறாா் அமைச்சா் பி.தங்கமணி.
பெண்களிடம் வாக்குகள் சேகரிக்கிறாா் அமைச்சா் பி.தங்கமணி.

தமிழகத்திலேயே நகராட்சிகளில் முதன் முதலாக புதைவட மின்பாதை அமைக்கப்பட்ட நகராட்சியாக குமாரபாளையம் உள்ளது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீதி, வீதியாகச் சென்று அமைச்சா் பி.தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, வாக்காளா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்குத் தேவையான வளா்ச்சிப் பணிகளைச் செய்துள்ளது. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள், பிற மாநில மக்களும் வியக்கும் வகையில் உள்ளன. தற்போது அதிமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையை தமிழக மக்கள் பெரிதும் விரும்புகின்றனா். குறிப்பாக, பெண்கள் மத்தியில் வாஷிங் மெஷின், குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

குமாரபாளையம் நகராட்சியில் தமிழகத்திலேயே முதன் முதலாக புதைவட மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிப் பகுதியில் குடிநீா், தாா்சாலை என அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, வாக்காளா்கள் அதிமுகவுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். உடன், அதிமுக நகரச் செயலாளா் ஏ.கே.நாகராஜன், துணைச் செயலாளா் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com