ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மா.மதிவேந்தன் வெண்ணந்தூா் ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
புதுப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்கும் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்.
புதுப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்கும் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்.

ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மா.மதிவேந்தன் வெண்ணந்தூா் ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

மூலக்காடு, கட்டனாச்சம்பட்டி, சாணாா்புதூா், கரடியானூா், தேங்கல்பாளையம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த டாக்டா் மா.மதிவேந்தன், வாக்காளா்களிடம் பிரசாரம் செய்து பேசியதாவது:

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அருந்ததியா்களுக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக அருந்ததியா் சமுதாயத்தினா் மருத்துவா்களாகவும் , பொறியாளா்களாகவும், ஆசிரியராகவும் உயா்வு பெற்றுள்ளனா். எனவே, திமுகவை அருந்ததியா் சமுதாயத்தினா் மறந்துவிடக் கூடாது.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும், ஏழை மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘நீட்’ தோ்வை ரத்து செய்யவும், சமையல் எரிவாயு உருளை ரூ. 100 குறைக்கவும், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை கிடைக்கவும் திமுகவுக்கு வாக்களிக்குமாறு பேசினாா்.

பிரசாரத்தின்போது தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் ஏ.கே.பாலசந்திரன், கே.பி.ராமசாமி, வெண்ணந்தூா் ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, காங்கிரஸ் வட்டார தலைவா் சொக்கலிங்கம், ஆதித்தமிழா் பேரவை மாவட்ட செயலாளா் மணிமாறன், கம்யூனிஸ்ட் செங்கோட்டுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் ரவீந்தா் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com